செய்திகள்

கூடங்குளம் அருகே பள்ளிக்கூடத்தில் மீனவர் தற்கொலையில் 4 பேரிடம் விசாரணை

Published On 2018-11-13 11:35 GMT   |   Update On 2018-11-13 11:35 GMT
கூடங்குளம் அருகே பள்ளிக்கூடத்தில் மீனவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூட்டப்புளியை சேர்ந்த மீனவர் கிறிஸ்டோபர் (வயது23). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூட வராண்டாவில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக கிறிஸ்டோபரின் தந்தை சந்தியாகு பழவூர் போலீசில் புகார் செய்தார். மேலும் கிறிஸ்டோபர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட் டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து பழவூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ரகு பாலாஜி மற்றும் போலீசார் அவர்களை சமரசம் செய்து கிறிஸ்டோபர் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இதில் கிறிஸ்டோபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கிறிஸ்டோபர் அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த பிரச்சினையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட கிறிஸ்டோபர் நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு கூட்டப்புளி வந்த கிறிஸ்டோபர், பள்ளிக் கூடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

அவர் தற்கொலைக்கு முன்பாக சிலரது பெயர்களை சுவற்றில் எழுதி வைத்து இருந்தார். இதனால் கிறிஸ்டோபர் தற்கொலைக்கு அவர்கள் காரணமா? என்று போலீசார் 4 பேர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #tamilnews
Tags:    

Similar News