செய்திகள்

சூளகிரி பகுதிகளில் கடும் பனி பொழிவினால் பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் அவதி

Published On 2018-11-12 16:30 GMT   |   Update On 2018-11-12 16:30 GMT
சூளகிரி பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனி பொழிவினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
வேப்பனஹள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக கடும் பனி பொழிவு இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை நீடித்தது. இதனால் வீடுகளின் ஜன்னல், கதவுகள் மூடப்பட்டு இருந்தும் பெரும் பனியாக உணரப்பட்டது. வாகனங்கள் மீது பனி துளி விழுந்து, வாகனங்களை கழுவியதுபோல இருந்தது. வாகன ஓட்டிகள் சொட்டர் - குல்லா அணிந்தவாறு வாகனங்களை ஓட்டினர். 

தேசிய நெடுஞ்சாலையில் பத்து அடிக்கு முன்பு என்ன வருகிறது என்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர். பனி அதிகமாக கொட்டுவதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் ஏற்படும் என்ற அச்சத்துடன் உள்ளனர். 

சூளகிரி பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனி பொழிவினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். 
Tags:    

Similar News