செய்திகள்

வந்தவாசி அருகே மாமாவை தாக்கிய தங்கை மகன் கைது

Published On 2018-11-09 20:45 IST   |   Update On 2018-11-09 20:45:00 IST
வந்தவாசி அருகே ஜல்லி கற்களை அகற்றாத தகராறில் மாமாவை தாக்கிய தங்கை மகன் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி:

வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (60) விவசாயி இவரது வீட்டின் அருகே இவரது தங்கை மகன் விமல்ராஜ் (24) என்பவர் வசித்து வருகின்றார். விமல்ராஜ் வீடுகட்ட ஜல்லி கற்களை வாங்கி வீட்டின் அருகே கொட்டி வைத்திருந்ததாக தெரிகிறது. 

பல மாதங்களாக இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாக முனுசாமி கடந்த 6ந்தேதி ஜல்லி கற்களை அகற்றும்படி விமல்ராஜிடம் கூறினாராம். அப்போது இருவருக்கும் வாக்குவதாம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விமல்ராஜ் கையில் வைத்திருந்த கட்டையால் சரமாரியாக முனுசாமியை தாக்கி  உள்ளார். 

இதில் காயமடைந்த முனுசாமி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக முனுசாமியின் மனைவி மகேஸ்வரி கீழ் கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜை கைது செய்தார்.
Tags:    

Similar News