செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயத்தை படத்தில் காணலாம்

நாமக்கல் அருகே லாரியில் ரூ. 28 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் கடத்தல்- 2 பேர் கைது

Published On 2018-11-08 11:18 GMT   |   Update On 2018-11-08 11:18 GMT
நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தையை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள புதுசத்தரம் பகுதி வழியாக மினி கண்டெய்னர் லாரியில் எரி சாராயம் கடத்தி செல்வதாக நாமக்கல் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான போலீசார், புதுசத்திரம் பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது எரிசாராயம் கடத்தி வந்த மினி கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

கண்டெய்னருக்குள் 550 கேனில் 19 ஆயிரத்து 250 லிட்டர் எரி சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாராயம் அரியானா மாநிலத்தில் இருந்து கடத்தி எர்ணாகுளத்துக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 44) மற்றும் மாற்று டிரைவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சிவைய்யா (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான 2 டிரைவர்களை படத்தில் காணலாம்

பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயத்தை சேலம் சரக மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் பார்வையிட்டு, டிரைவர்களை கைது செய்த போலீசாரை பாராட்டினர். #tamilnews
Tags:    

Similar News