செய்திகள்

மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிவு

Published On 2018-11-07 09:56 GMT   |   Update On 2018-11-07 09:56 GMT
மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. #MullaperiyarDam
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் அணையின் நீர் மட்டம் 136 அடி வரை உயர்ந்தது. ஆனால் தற்போது மழை இல்லை. மேலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் 131.50 அடியாக குறைந்துள்ளது. 1062 கன அடி நீர் வருகிறது. 1915 கன அடி திறந்து விடப்படுகிறது.

வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக அணையின் நீர் மட்டம் 69 அடியாக நீடிக்கிறது. அணைக்கு 2,140 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே திறந்து விடப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.40 அடியாக உள்ளது. 12 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 125.95 அடியாக உள்ளது. 27 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.6, தேக்கடி 1.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. #MullaperiyarDam
 
Tags:    

Similar News