செய்திகள்

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.81.84க்கு விற்பனை

Published On 2018-11-04 08:48 IST   |   Update On 2018-11-04 08:48:00 IST
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.84க்கு விற்பனையாகிறது. இதேபோன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.77.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. #FuelPrice #Petrol #Diesel
சென்னை:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது.  இதனை அடுத்து தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக இவற்றின் விலை குறைந்துள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.84க்கு விற்பனையாகிறது.  இதேபோன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.77.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. #FuelPrice #Petrol #Diesel
Tags:    

Similar News