செய்திகள்

அந்தியூரில் நள்ளிரவில் வேனுக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள்

Published On 2018-11-03 17:35 IST   |   Update On 2018-11-03 17:35:00 IST
அந்தியூரில் வேனுக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர்:

அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 48). ஈச்சேர் வேனில் மூட்டைகளை ஏற்றி கொண்ட ஒவ்வொரு கடைகளுக்கும் சப்ளை செய்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் தனது வேனை பஸ் நிலையம் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தார். அதில் 500 அட்டைகளில் மூட்டைகளும் இருந்தது.

இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகம் என்பவர் ஜெயராமனுக்கு போன் மூலம உங்கள் வேன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

உடனே ஜெயராமன் மற்றும் அக்கம் பக்கத்தினர் எரிந்த வேனில் உள்ள தீயை அணைத்தனர். இதில் வேனின் முன் பகுதி எரிந்து சாம்பலானது. இதன் சேதமதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.

வேனுக்கு யாரோ மர்ம ஆசாமி தீ வைத்திருக்க கூடும் என கருதப்படுகிறது.

இது பற்றிய புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News