செய்திகள்
சினிமா தியேட்டரில் கலெக்டர் நிர்மல் ராஜ் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.

திருவாரூரில் டெங்கு ஆய்வு- சினிமா தியேட்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2018-11-03 10:16 GMT   |   Update On 2018-11-03 10:16 GMT
திருவாரூரில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் திரையரங்கம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவாரூர்:

திருவாரூர் காட்டுக்கார தெரு. பேபி டாக்கீஸ் ரோடு, பனகல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு கொசு ஒழிப்பு குறித்த நேரடி ஆய்வு நடத்தினார். அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் திரையரங்கம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், பழைய இரும்பு கடை ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பார்வையிட்டு தேவையற்ற குப்பைகளை பொதுவெளியில் கொட்ட வேண்டாம் என அறிவுறுத்தினார்

பின்னர் இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 189 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இதுவரை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News