செய்திகள்
மர்மகாய்ச்சலுக்கு பலியான வளர்மதி.

தேவதானப்பட்டி அருகே மர்மகாய்ச்சலுக்கு இளம்பெண் பலி

Published On 2018-11-01 04:56 GMT   |   Update On 2018-11-01 04:56 GMT
தேவதானப்பட்டி அருகே மர்மகாய்ச்சலுக்கு இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் வளர்மதி(வயது20). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வளர்மதி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் என்ன காய்ச்சல் எனத்தெரியாமல் புலம்பினர். தேவதானப்பட்டி பகுதியில் மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, எழுவனம்பட்டி ஆகிய பகுதிகளில் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், இளம்பெண் இறந்தது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த ஊர்களில் மருத்துவமுகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சாதாரண காய்ச்சல் என அலட்சியப்படுத்தவேண்டாம். உடனடியாக அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.




Tags:    

Similar News