செய்திகள்

காகிதமில்லா யு.டி.எஸ். சேவை மேலும் விரிவு - முன்பதிவில்லா டிக்கெட்டை செல்போனில் உடனடியாக எடுக்கலாம்

Published On 2018-10-31 22:12 GMT   |   Update On 2018-10-31 22:12 GMT
யு.டி.எஸ். சேவை மூலம் இந்தியா முழுவதும் பயணிகள், எக்ஸ்பிரஸ் என எல்லாவித ரெயில்களிலும் முன்பதிவில்லா டிக்கெட்டை தங்களது செல்போனிலேயே பயணிகள் உடனடியாக எடுக்கலாம். #SouthernRailway #OnlineTicket
சென்னை:

செல்போன் மூலம் காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதி, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இந்த வசதி செயல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் சென்னை முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் இந்தியா முழுவதும் இந்த யு.டி.எஸ். சேவை இன்று (வியாழக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் காகிதமில்லா டிக்கெட் சேவையை பயன்படுத்த குறிப்பிட்ட ரெயில் நிலையம் 5 கி.மீ.க்குள் அமைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்தியா முழுவதும் பயணிகள், எக்ஸ்பிரஸ் என எல்லாவித ரெயில்களிலும் முன்பதிவில்லா டிக்கெட்டை தங்களது செல்போனிலேயே பயணிகள் உடனடியாக எடுக்கலாம்.

இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #SouthernRailway #OnlineTicket 
Tags:    

Similar News