செய்திகள்

செல்போன் பேசியபடி சென்னை அரசு மாநகர பேருந்துகளை இயக்கிய 50 ஓட்டுனர்கள் சஸ்பெண்ட்

Published On 2018-10-30 15:12 IST   |   Update On 2018-10-30 15:12:00 IST
சென்னையில் செல்போன் பேசியபடி அரசு மாநகர பேருந்துகளை இயக்கிய 50 ஓட்டுனர்களை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். #MTCdrivers #MTCdriverssuspended
சென்னை:

சென்னையில் மாநகர பேருந்துகளை ஓட்டும் சில டிரைவர்கள் பரபரப்பான சாலை போக்குவரத்துக்கு இடையில் பேருந்தை இயக்கியபடி செல்போனில் பேசிக் கொண்டு செல்வதுண்டு.

இதனால், சாலையில் இருக்க வேண்டிய கவனம் சிதறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பயணிகள் அச்சப்படுகின்றனர்.



இதுதொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பரவலாக புகார்களும் வந்தன. இப்புகார்கள் மீது விசாரணை நடத்திய உயரதிகாரிகள் 50 டிரைவர்களை இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து, இதே தவறை செய்யும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. #MTCdrivers #MTCdriverssuspended  

Tags:    

Similar News