செய்திகள்

18 எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் - தினகரன்

Published On 2018-10-25 18:25 GMT   |   Update On 2018-10-25 18:25 GMT
தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம் எல் ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என அமமுக துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
சென்னை:

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முதலில் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி அறிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.



இதுபற்றி டிடிவி தினகரன் கூறுகையில், தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வதா அல்லது தேர்தலை சந்திப்பதா என 18 பேரிடமும் நாளை கருத்து கேட்க உள்ளேன்.

நீதிமன்ற தீர்ப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழகத்தில் இடைத்தேர்தல் வருமா என்பது சந்தேகமாக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
Tags:    

Similar News