செய்திகள்

குட்கா வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2018-10-25 15:48 GMT   |   Update On 2018-10-25 15:48 GMT
குட்கா ஊழல் வழக்கில் கைதான சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #GutkhaScam #CBI
சென்னை:

தமிழகத்தின் மிக முக்கிய ஊழல் வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படும் குட்கா வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் இந்த வழக்கு மிகத்தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில் மாதவராவ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கடந்த மாதம் சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.



இதையடுத்து, சமீபத்தில் ஜாமீன் கோரி சிவக்குமார் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு குறித்து சிபிஐ தனது பதிலை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதில் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சிபிஐ தரப்பு பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
Tags:    

Similar News