செய்திகள்

மாமல்லபுரம் பகுதியில் டெங்கு - பன்றிக்காய்ச்சல் பீதி

Published On 2018-10-25 08:55 GMT   |   Update On 2018-10-25 08:55 GMT
மாமல்லபுரம் பகுதியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பீதியை தொடர்ந்து அரசு அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் குவிந்தனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம், தேவநேரி, மணமை, கடம்பாடி, பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம் பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் இன்று காலை மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் இருக்கிறதா? என்று அறிய ரத்த பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர்.

இதை வரிசையில் நின்று கவனித்த மற்ற சாதாரண சளி, இருமல், தலைவலி மற்றும் தொடர் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளும் பயத்தில் தங்களுக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் வந்திருக்குமோ என்ற பயத்தில் மருத்துவர்களிடம் கட்டாய ரத்த பரிசோதணைக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர்களிடையே நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் போதிய விழிப்புணர்வு விளக்கம் கொடுத்து நோயாளிகளை சமாதானப்படுத்தினர்.

Tags:    

Similar News