செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக சரிவு

Published On 2018-10-23 04:16 GMT   |   Update On 2018-10-23 04:16 GMT
மேட்டூர அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 14 ஆயிரத்து 232 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த 19-ந் தேதி 24 ஆயிரத்து 764 கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர், படிப்படியாக குறைய தொடங்கியது.

நேற்று 17ஆயிரத்து 994 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் குறைந்து 14ஆயிரத்து 232 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்திற்காக 13ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 105.18 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 105.20 அடியாக உயர்ந்தது.

Tags:    

Similar News