செய்திகள்

கிருஷ்ணகிரியில் சாலையோரம் வீசப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் - போலீசார் கைப்பற்றி விசாரணை

Published On 2018-10-15 10:15 GMT   |   Update On 2018-10-15 10:15 GMT
கிருஷ்ணகிரியில் சாலையோரம் வீசப்பட்ட நூற்றுக்கணக்கான ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். #SmartRationCards
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலையோரம் இன்று ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் சிதறிக் கிடந்தன. இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சாலையோரம் வீசப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கைப்பற்றினர். ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை வீசியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



அந்த ரேசன் கார்டுகளில் பெரும்பாலும், போச்சம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இருந்தன. பொது பிரச்சினை காரணமாக விரக்தி அடைந்து மொத்தமாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வீசப்பட்டதா? அல்லது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க வேண்டிய கார்டுகளா? என்பது தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட முகவரியில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #SmartRationCards 
Tags:    

Similar News