செய்திகள்

பெண்களுக்கு அனுமதி: சென்னை அய்யப்பன் கோவில் சென்று விரதம் முடிப்போம்- சீர்காழி அய்யப்ப பக்தர்கள் முடிவு

Published On 2018-10-13 13:20 GMT   |   Update On 2018-10-13 13:20 GMT
சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வழங்கியதையடுத்து சபரிமலைக்கு செல்வதற்கு பதிலாக சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக சீர்காழி அய்யப்ப பக்தர்கள் கூறியுள்ளனர்.
சீர்காழி:

சீர்காழியை சேர்ந்த சபரிகிரி அய்யப்பா சேவா சங்கத்தின் தலைவரும்,43ஆண்டுகளாக சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப குருசாமியுமான அமர்நாத்சுவாமிகள் கூறியதாவது:-

சீர்காழியிலிருந்து கடந்த 43ஆண்டுகளாக 120பேர் கொண்ட பக்தர்கள் சபரிமலையாத்திரைசென்று அய்யப்பனை தரிசனம் செய்துவருகிறோம்.எங்களது குழுவில் உள்ள அனைத்து அய்யப்ப பக்தர்களும் 48நாட்கள் முறையாக விரதம் இருந்து சபரிமலை செல்கிறோம். ஆனால் அண்மையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது.

இது சபரிமலையில் காலம், காலமான நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. பெண்கள் 48நாட்கள் விரதம் இருந்து சபரிமலை கோயிலுக்கு சென்று வழிபட இயலாது. இந்த தீர்ப்பினால் அய்யப்ப பக்தர்கள் மனவருத்தம் அடைந்துள்ளோம். ஆகையால் இந்த ஆண்டு முதல் சபரிமலைக்கு செல்வதற்கு பதிலாக சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளோம். எங்களது குழுவில் உள்ள 120 அய்யப்ப பக்தர்கள், வரும் கார்த்திகை மாதம் விரதம் மேற்கொண்டு சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று அங்கு நெய் அபிஷேகம் செய்து விரதத்தை முடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News