செய்திகள்

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் - சி.பி.ஐ.விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-10-12 09:39 GMT   |   Update On 2018-10-12 09:39 GMT
தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #tenderirregularities #Edappadipalaniswami
சென்னை:

தமிழக நெடுஞ்சாலைத்துறையில்  டெண்டர்கள் விட்டதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்  விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது.


இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட் இன்று  உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் 3 மாதங்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணையை சி.பி.ஐ.  முடிக்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்னும் ஒரு வாரத்துக்குள் சி.பி.ஐ.யிடம் லஞ்ச ஒழிப்புதுறை  ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #MadrasHC #CBIenquiry #tenderirregularities #Edappadipalaniswami

Tags:    

Similar News