செய்திகள்
சுட்டுக்கொல்லப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதி, தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் கார்த்திக்வேல்.

மருத்துவ கல்லூரி மாணவியை போலீஸ்காரர் சுட்டு கொன்றது ஏன்?- திடுக்கிடும் தகவல்கள்

Published On 2018-10-10 04:53 GMT   |   Update On 2018-10-10 04:53 GMT
மாணவி சரஸ்வதியை கார்த்திக்வேல் சுட்டுக்கொன்றது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. #ChennaiCop #LoverShotDead
விழுப்புரம்:

மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதியை வேலூர் போலீஸ்காரர் கார்த்திக்வேல் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். மாணவி சரஸ்வதியை கார்த்திக்வேல் சுட்டுக்கொன்றது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

மாணவி சரஸ்வதி பிளஸ்-2 படித்தபோது பேஸ்புக் மூலம் போலீஸ்காரர் கார்த்திக்வேலுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் சரஸ்வதிக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

பின்னர் போலீஸ்காரர் கார்த்திக்வேல் வேலூரில் இருந்து சென்னை வந்து சரஸ்வதியை அடிக்கடி சந்தித்தார். இருவரும் நெருங்கி பழகி வந்தனர். பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவந்தனர். கார்த்திக்வேல் தனது ஊரில் உள்ளவர்களிடம் மருத்துவ கல்லூரியில் படிக்கும் சரஸ்வதியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிவந்தார். தன்னுடன் பணியாற்றும் போலீசாரிடமும் இந்த தகவலை அவர் தெரிவித்து வந்தார்.

இந்தநிலையில் மாணவி சரஸ்வதி அந்த கல்லூரியில் உள்ள ஒரு மாணவருடன் பேசுவதாக கார்த்திக்வேலுக்கு தகவல் கிடைத்தது. இதனால் சரஸ்வதி மீது கார்த்திக் வேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தான் உயிருக்கு உயிராக காதலித்த சரஸ்வதி தன்னை விட்டுவிட்டு சென்று விடுவாரோ? என்று நினைத்தார். வேறுஒரு மாணவருடன் பேசுவது ஏன் என்று அவர் சரஸ்வதியிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 6 மாதமாக இருவரும் பேசாமல் இருந்துவந்தனர்.


இந்த சூழ்நிலையில் நேற்று சரஸ்வதி தனது பிறந்தநாளை கொண்டாட அன்னியூருக்கு சென்றார். தனது காதலன் கார்த்திக்வேலுக்கும் தகவல் தெரிவித்தார். அவரும் இரவு அங்கு வந்தார். அப்போது வேறுஒரு மாணவருடன் சரஸ்வதி பேசுவது குறித்து கார்த்திக்வேல் மீண்டும் கேட்டார். அதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து சரஸ்வதியை கார்த்திக்வேல் துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. #ChennaiCop #LoverShotDead
Tags:    

Similar News