செய்திகள்

திருவேற்காட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- ‘போக்சோ’ சட்டத்தில் முதியவர் கைது

Published On 2018-10-09 10:01 GMT   |   Update On 2018-10-09 10:01 GMT
திருவேற்காட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

திருவேற்காடு சக்ரேஸ்வர் நகரில் உள்ள முள்புதரில் நேற்று மாலை ஒரு சிறுமியின் அழுகுரல் கேட்டது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்றனர். அப்போது பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணிவியை முதியவர் ஒருவர் அங்கு இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது.

இதனால் அங்கு சென்றவர்கள் அந்த முதியவரை அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர்.

மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட முதியவரை பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் ஏழுமலை (60). திருவேற்காடு முருகன் நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

தினமும் பள்ளியில் இருந்து அந்த வழியாக வீடு திரும்பும் மாணவியை நோட்டம் பார்த்து அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.#tamilnews
Tags:    

Similar News