செய்திகள்

132 அடியை எட்டிய பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2018-10-06 04:03 GMT   |   Update On 2018-10-06 04:03 GMT
நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியுள்ளது. #MullaPeriyar #PeriyarDam
கூடலூர்:

கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர தொடங்கி உள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு 127 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 132 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3474 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1550 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

கோப்புப்படம்

இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து தற்போது 59.58 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.50 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 1, தேக்கடி 7, வைகை அணை 3.6, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

இன்று காலை முதலே தேனி மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் மழைப்பொழிவு அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MullaPeriyar #PeriyarDam
Tags:    

Similar News