செய்திகள்

எழில்மிகு தோற்றத்தில் வடபழனி போலீஸ் நிலையம்- ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்தது

Published On 2018-10-04 17:06 IST   |   Update On 2018-10-04 17:06:00 IST
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உள்ள வடபழனி போலீஸ் நிலையம் எழில்மிகு தோற்றத்தில் உள்ளதை அடுத்து ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்ததுள்ளது.
சென்னை:

வடபழனி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்த்ரு ஆய்வாளராக பொறுப்பேற்ற பின்னர் காவல் நிலையத்தை முறைப்படுத்தினார்.

போலீஸ் நிலைய வளாகத்தையும், போலீஸ் நிலையத்தையும் சுத்தமாக பராமரித்தார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டன.

போலீஸ் நிலைய சுவர்களில் சிந்தனையை தூண்டும் வாசகங்கள் போட்டோ வடிவில் உருவாக்கப்பட்டு பொறுத்தப்பட்டன. போலீஸ் நிலைய நுழைவு வாயிலில் வரவேற்பாளர் நியமிக்கப்பட்டு, புகார் கொடுக்க வருபவர்கள் கனிவுடன் வரவேற்கப்படுகின்றனர். போலீஸ் நிலையத்தினுள் மெல்லிய இசை ஒலிக்கிறது.

பார்வையாளர்கள் அமரும் அறையில் மோசடிப் பேர் வழிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது பற்றிய வாசகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டு கவரும் விதத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்ன? என்பது பற்றிய வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

மகளிர் போலீஸ் நிலைய பகுதியில் புகார் கொடுக்க வருபவர்களின் குழந்தைகள் விளையாட தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. முதல் மாடியில் காவலர்கள் ஓய்வு அறை அருகே உடற்பயிற்சி கூடமும் உள்ளது. இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உள்ள வடபழனி போலீஸ் நிலையம் எழில் மிகு தோற்றத்துடன் காட்சி அளிப்பதை அங்கு செல்பவர்கள் பார்த்து வியக்கின்றனர்.

இப்படி மற்ற போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்து செயல் பட்டமைக்காக வடபழனி போலீஸ் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சந்த்ருவை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். #tamilnews
Tags:    

Similar News