செய்திகள்

ஊத்துக்கோட்டை செல்லி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.2.89 லட்சம் வசூல்

Published On 2018-10-04 16:42 IST   |   Update On 2018-10-04 16:42:00 IST
ஊத்துக்கோட்டை அருகே செல்லி அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணியபோது ரூ.2.89 லட்சம் வசூலாகி உள்ளது.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே செங்கரையில் காட்டுச் செல்லி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வியாழன், ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. செயல் அலுவலர் சீனிவாசன் மேற்பார்வையில் எண்ணப்பட்டது. இதில் ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 873 வசூல் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News