செய்திகள்

குடியாத்தம் அருகே மானை வேட்டையாடிய 2 பேர் கைது

Published On 2018-10-03 16:03 GMT   |   Update On 2018-10-03 16:03 GMT
குடியாத்தம் அருகே மானை வேட்டையாடிய 2 பேரை கைது செய்து வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்ட வனஅலுவலர் முருகன் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் பிச்சாண்டி, வெங்கடேசன், பூபதி மற்றும் வனத்துறையினர் பரதராமியை அடுத்த வீரிசெட்டிபல்லி காப்புக்காடுகள் கன்னிங்பாறை பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகமான முறையில் நடமாடிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தபோது பரதராமியை அடுத்த பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்த மணி (வயது 40), கோபி (32) என்பதும், அவர்கள் கம்பிவலை மூலம் பெண் மானை வேட்டையாடி கொன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து மான் தலை மற்றும் தோலை கைப்பற்றினர். மேலும் மணி, கோபி ஆகியோரை வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News