செய்திகள்

கோவையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம்

Published On 2018-10-01 17:11 IST   |   Update On 2018-10-01 17:11:00 IST
கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கவுண்டம்பாளையம்:

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் புதிய தலைவராக சுந்தரராஜ், செயலாளராக சக்திவேல், பொருளாளராக செந்தில்குமார், துணை தலைவராக கோபால், துணை செயலாளராக தஙகவேல், துணை பொருளாளராக அருள் முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் மேடை மண் (கிராவல்) அனுமதி சீட்டு இல்லாமல் சங்க உறுப்பினர்கள் டிப்பர் லாரிகளை இயக்க கூடாது. அரசு அதிகாரிகள் முறையான அனுமதி சீட்டுகள் வழங்க வேண்டும். முறையான அனுமதி சீட்டு இல்லாத லாரிகளை எங்கள் பகுதிக்குள் அனுமதிக்க மாட்டோம். எடுக்கக்கூடிய மேடை மண் விலையை புதியதாக நிர்னயம் செய்வது. லாரியில் அளவு லோடு 3 யூனிட் என நிர்னயம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பெரிய நாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம், தடாகம், அன்னூர், மேட்டுப்பாளையம், இடிகரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News