செய்திகள்

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் வட மாநில வாலிபர் ரகளை - பொதுமக்கள் தர்ம அடி

Published On 2018-10-01 10:05 GMT   |   Update On 2018-10-01 10:05 GMT
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்ட வட மாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஆயிரம் பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் அங்கு வந்தார்.

அவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். ஆஸ்பத்திரிக்கு வந்த ஆண்களின் சட்டையை பிடித்து இழுத்து கிழித்தார். பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்கதாக கூறப்படுகிறது.

மேலும் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நர்சுகளை அடிக்க பாய்ந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். அவர்களது கையில் சிக்காமல் அங்குமிங்கும் ஓடினார்.

பின்னர் பொதுமக்கள், ஆஸ்பத்திரி காவலாளிகள் அவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து திமிற தொடங்கினார். அவரது கை, கால்களை கட்டி தர்ம அடி கொடுத்தனர்.

இதில் அவரது கண், வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் விசாரித்த போது இந்தியில் பேசினார். இதனால் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவர் தனது பெயரை மாறி, மாறி கூறி வருகிறார். சிகிச்சை முடிந்து வெளியே வந்தால் தான் அவரிடம் விசாரணை நடத்தி முழு விவரங்களை பெற முடியும். அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News