செய்திகள்

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் மணல் திருட்டு

Published On 2018-10-01 09:10 GMT   |   Update On 2018-10-01 09:10 GMT
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. #Sandtheft

தேனி:

கூடலூரில் தெற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் கூடலூர்-குமுளி மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது குருவனூத்து முல்லைப் பெரியாறு வண்ணாந்துறை ஆற்றில் இருந்து பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (வயது 48) என்பவர் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த டிராக்டரின் உரிமையாளர் கூடலூர் கே.கே.காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் (55) என்பதும் தெரிய வந்தது. போலீசார் மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து பாண்டியன் மற்றும் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி பகுதியில் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி யாசிகா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஓடைப் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் திருடி வந்த முத்துப்பாண்டி (42) என்பவரை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். #Sandtheft

Tags:    

Similar News