செய்திகள்

5 ஆண்டுகளுக்கு முன்பு மாயம்- மகனை கண்டுபிடிக்க கோரி பெற்றோர் உண்ணாவிரதம்

Published On 2018-10-01 07:48 GMT   |   Update On 2018-10-01 07:48 GMT
சோழிங்கநல்லூரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மகனை கண்டுபிடித்து தர கோரி அவரது பெற்றோர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சோழிங்கநல்லூர்:

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சூளைமாநகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் பாண்டியன் (57). இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கார்த்தி.

5 வருடத்திற்கு முன்பு கார்த்தி படூரில் உள்ள இந்துஸ்தான் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கார்த்திக் கல்லூரிக்கு செல்லாமல் வெளியே சுற்றி வந்ததை கண்டு தந்தை கண்டித்தார். இதனால் கார்த்திக் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.

இது தொடர்பாக 26.10.2013 அன்று துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பாண்டியன் புகார் கொடுத்தார். ஆனால் கிடைக்கவில்லை.

இதுபற்றி பாண்டியன் போலீஸ் நிலையத்திற்கு அடிக்கடி சென்று கேட்டு வந்தார். அப்போது போலீசார் அலட்சியமாக பேசி அனுப்பியதாக தெரிகிறது.

இதுகுறித்து பாண்டியன் சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கும், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கும் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே காணாமல் போன மகனை போலீசார் கண்டுபிடிக்கும் வரை பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News