செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே வீட்டு கதவை உடைத்து நகை கொள்ளை

Published On 2018-09-30 17:22 IST   |   Update On 2018-09-30 17:22:00 IST
ஆண்டிப்பட்டி அருகே வீட்டு கதவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். #Robbery

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு சிங்கராஜபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் குபேந்திரன் மனைவி வசந்தா. கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

வீட்டில் கட்டுமானப்பணி நடப்பதால் கொத்தனார் பிச்சை மட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பிச்சை அதிர்ச்சி அடைந்து வசந்தாவிற்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து வருசநாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். #Robbery

Tags:    

Similar News