செய்திகள்

திண்டுக்கல் அருகே கனமழைக்கு இடிந்த வீடு

Published On 2018-09-29 16:50 IST   |   Update On 2018-09-29 16:50:00 IST
திண்டுக்கல் அருகே நேற்று கனமழை பெய்ததால் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் கொளுத்தி வந்தநிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

சாணார்பட்டி அருகே வி.எஸ்.கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வி.எஸ்.கே.புதூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் முத்தையா. கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். நேற்று இப்பகுதியில் கனமழை பெய்ததால் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை.

Tags:    

Similar News