செய்திகள்

எச் ராஜா மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விவகாரம்- அட்வகேட் ஜெனரலுக்கு ஐகோர்ட் நோட்டீசு

Published On 2018-09-28 10:16 GMT   |   Update On 2018-09-28 10:16 GMT
கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவதற்கு முன் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் விளக்கம் கேட்டது தொடர்பாக பதிலளிக்க அட்வகேட் ஜெனரலுக்கு ஐகோர்ட் நோட்டீசு அனுப்பியுள்ளது. #HRaja #ChennaiHighcourt
சென்னை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துக் கொண்ட பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா, ‘ஐகோர்ட் குறித்து கடுமையான வார்த்தையில் விமர்சனம் செய்தார்.

இதையடுத்து அவர் மீது சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

அதேநேரம், கண்ணதாசன் என்பவர் எச்.ராஜா மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அட்வகேட் ஜெனரலிடம் கடந்த வாரம் மனு கொடுத்தார். அந்த மனுவுக்கு விளக்கம் அளிக்க எச்.ராஜாவுக்கு அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் கண்ணதாசன் வழக்கு தொடர்ந்தார். அதில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் விளக்கம் கேட்கக்கூடாது என்றும் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இதற்கு வருகிற அக்டோபர் 8-ந்தேதிக்குள் பதில் அளிக்க அட்வகேட் ஜெனரலுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். #HRaja #AdvocateGeneral #ChennaiHighcourt
Tags:    

Similar News