செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலைய 2வது அணு உலையில் 500 மெகாவாட் மின் உற்பத்தி

Published On 2018-09-27 06:40 GMT   |   Update On 2018-09-27 06:40 GMT
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் இன்று காலை நிலவரப்படி மின்சாரம் உற்பத்தி 500 மெகாவாட்டை எட்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #KudankulamNuclearPowerPlant
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இரு அணு உலைகள் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் சாரம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி 2-வது அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே முதலாவது அணு உலையிலும் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி நிறுத்தப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகளும் நிறுத்தப் பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பணி முடிவடைந்து 2-வது அணு உலையில் மீண்டும் நேற்று மின்உற்பத்தி தொடங்கியது.

முதலில் 300 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. அதனை படிப்படியாக அதிகரிக்கும் நடவடிக்கையில் அணுமின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 2-வது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி 500 மெகாவாட்டை எட்டியிருப்பதாக அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #KudankulamNuclearPowerPlant

Tags:    

Similar News