செய்திகள்

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு - விசாரணை தள்ளிவைப்பு

Published On 2018-09-25 20:04 GMT   |   Update On 2018-09-25 20:04 GMT
விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்து உத்தரவிட்டார். #Vijayakanth
சென்னை:

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டது தான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்றும், இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு(நாளை மறுநாள்) நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.  #Vijayakanth
Tags:    

Similar News