செய்திகள்
ஏரியில் இருந்து மண் கடத்தப்படுவதாக புகார் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்
நாமக்கல் அருகே ஏரியில் இருந்து மண் கடத்தப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல்-பரமத்தி சாலையில் வள்ளி புரத்துக் கும், காவேட்டிப் பட்டிக்கும் இடையே சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப் படுவதாகவும், அதில் உள்ள மண் அனுமதியின்றி வெட்டி எடுக்கப் படுவதாகவும், தனிநபர் சிலருக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் இப்பணி நடைபெறுவதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் நாமக்கல்-பரமத்தி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் டி.எஸ்.பி ராஜேந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது புகார் குறித்து முறையாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews