செய்திகள்

கரூர் அருகே குடோனில் பீடியை பற்றவைத்த வெல்டிங் தொழிலாளி கருகி பலி

Published On 2018-09-22 21:57 IST   |   Update On 2018-09-22 21:57:00 IST
கரூர் அருகே குடோனில் பீடியை பற்ற வெல்டிங் தொழிலாளி தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே குடோனினுள் வீசியதால் தீப்பிடித்தது. இதில் சிக்கி அவர் பலியானர்.
கரூர்:

சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 50), வெல்டிங் தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் நடைபெற்ற வேலைக்காக வந்திருந்தார். அங்கு கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தங்கி இருந்த பணிபுரிந்து வந்தார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த குடோனில் தங்கியுள்ளார். அந்த குடோனில் பெயிண்டு டப்பாக்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் இருந்தது. 

புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய ஜெகநாதன், வழக்கம் போல் பீடியை பற்ற வைத்துள்ளார். பின்னர் தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே குடோனினுள் வீசி எறிந்துள்ளார். இதனால் எளிதில் தீபற்றும் தன்மையுடைய பெயிண்டு உள்ளிட்ட பொருட்களில் தீ வேகமாக பரவியது. 

இந்த நெருப்புகளில் ஜெகநாதன் சிக்கிக்கொண்டு கூக் கூரல் எழுப்பியுள்ளார். இதனை கேட்ட சக தொழிலாளர்கள் தண்ணீர், மணலை வீசி தீயை அணைக்க முயன்றதோடு, ஜெகநாதனை? காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஜெகநாதன் தீயில் வைத்து கருகி பலியாகினார்.

இது குறித்து வாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்த ஜெகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News