செய்திகள்

சிறுபாக்கம் அருகே பழமைவாய்ந்த கோவிலை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-09-19 12:26 GMT   |   Update On 2018-09-19 12:26 GMT
சிறுபாக்கம் அருகே பழமை வாய்ந்த கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுபாக்கம்:

சிறுபாக்கம் அருகே உள்ளது பொயனப்பாடி கிராமம். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஆண்டவர் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருச்செங்கோடு, திருச்சி, அரியலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக கோவிலின் மேற்கூரைகள், சுவர்கள், தரைதளத்தில் விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட் பெயர்ந்து விழுந்தும் சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில் வளாகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி கோ‌ஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
Tags:    

Similar News