செய்திகள்

வால்பாறையில் 44 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Published On 2018-09-18 12:07 GMT   |   Update On 2018-09-18 12:07 GMT
வால்பாறையில் விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

வால்பாறை, செப்.18-

வால்பாறையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வால்பாறை நகர் பகுதியில் உள்ள கோவில்கள், எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு 44 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

பின்னர் இந்து முன்னணி கவுரவத்தலைவர் தாமோதரன் தலைமையில் விசர்ஜன விழா நடைபெற்றது. இந்து முன்னணி ஒன்றிய பொதுச்செயலாளர் சபரீஸ்வரன், பா.ஜனதா பிரசார அணி மாவட்ட செயலாளர் செல்வக்குமார், ஒன்றிய தலைவர் ஜெயன், ஒன்றிய செயலாளர் அன்பரசு ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பிரபு வரவேற்றார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் விழாவை தொடங்கி வைத்தா. இந்துமுன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் பேசினார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு கொடியை அசைத்து விசர்ஜன ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நடுமலை ஆற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் (விசர்ஜனம்) கரைக்கப்பட்டன.

Tags:    

Similar News