செய்திகள்

பொள்ளாச்சி அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் வங்கி ஊழியர் தற்கொலை

Published On 2018-09-16 17:34 IST   |   Update On 2018-09-16 17:34:00 IST
கணவர் இறந்த துக்கத்தில் மிகுந்த மனவேதனை அடைந்த பெண் வங்கி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் முத்து நகரை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள நகர வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிவசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்ததால் விஜயலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News