செய்திகள்

7 பேரை விடுதலை செய்ய கவர்னர் ஒப்புதல் வழங்குவார் - ஜெயக்குமார் நம்பிக்கை

Published On 2018-09-15 06:04 GMT   |   Update On 2018-09-15 06:04 GMT
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விஷயத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்குவார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். #MinisterJayakumar #RajivCaseConvicts
சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரை மீது கவர்னர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் கூறி வருகின்றனர்.



இந்நிலையில் கவர்னர் முடிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும் என்றார். தமிழர்களின் எதிர்பார்ப்பை கவர்னர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

‘இலங்கை போரின்போது திமுக ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம். நேரத்திற்கு ஏற்றாற்போல் திமுக நிறம் மாறும். திமுகவை வரலாறு மன்னிக்காது’ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #MinisterJayakumar #RajivCaseConvicts

Tags:    

Similar News