செய்திகள்

கழுத்தை நெரித்து மனைவி கொலை- ரெயில்வே ஊழியர் கைது

Published On 2018-09-14 14:26 IST   |   Update On 2018-09-14 14:26:00 IST
மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர்:

திரு.வி.க. நகர் கோபாலபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (36). ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி கல்பனா. 10 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுரேஷ்-கல்பனா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சுரேஷ் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மனைவி கல்பனா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சுரேஷ் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார். உடல் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனையில் கல்பனா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது. தெரியவந்தது.

இதையடுத்து சுரேசிடம் திரு.வி.க. நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது தன்னை தட்டிக்கேட்ட மனைவி கல்பனாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து திரு.வி.க. நர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், ரெயில்வே ஊழியர் சுரேசை கைது செய்தார். அவர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ், நீதிபதி உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News