செய்திகள்

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2018-09-12 10:16 GMT   |   Update On 2018-09-12 10:16 GMT
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டதால் பெரியாறு அணைக்கு 649 கனஅடிநீரே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 131.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

நீர்திறப்பை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய போதும் அதிகளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது. இதனால் அணைக்கு 1346கனஅடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையிலிருந்து 3460 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.29 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெரியாறு 2, தேக்கடி 9.6, கூடலூர் 4.3, உத்தமபாளையம் 6.6, வீரபாண்டி 8, சண்முகாநதி அணை 8 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News