செய்திகள்

மருத்துவ சீட் வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி- கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2018-09-12 10:06 GMT   |   Update On 2018-09-12 10:06 GMT
மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை எல்.ஜி. நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 51). இவரது மகனுக்கு மருத்துவம் படிக்க சீட்டு வாங்கித்தருவதாக அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் ரவிராஜன் (51), அவரது நண்பர் கணேஷ்பாபு என்ற தென்னவன், இவரது மனைவி பிரேமா (51) ஆகியோர் ரூ.10 லட்சம் வாங்கியதாக கூறப்படுகி றது. ஆனால் குறிப்பிட்ட நாளில் மருத்துவச்சீட்டு வாங்கித்தரவில்லை.

இதனால் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு சுப்புலட்சுமி கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்காமல் 3 பேரும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் சுப்புலட்சுமி புகார் செய்தார். இதன் பேரில் கல்லூரி பேராசிரியர் ரவிராஜன், கணேஷ்பாபு, பிரேமா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News