செய்திகள்

தஞ்சையில் இன்றும்,நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Published On 2018-09-11 17:44 IST   |   Update On 2018-09-11 17:44:00 IST
தஞ்சையில் இன்றும்,நாளையும் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் காளிமுத்து வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி ஆணையர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பிரதான குழாய்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு முதல் 26-வது வார்டு வரையிலுள்ள பகுதிகளுக்கு இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்வதுடன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News