செய்திகள்

ஈரோடு பஸ் நிலையம் அருகே கம்யூனிஸ்டுகள் சாலை மறியல்- 150 பேர் கைது

Published On 2018-09-10 11:38 GMT   |   Update On 2018-09-10 11:38 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் சார்பில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #BharathBandh #PetrolDieselPriceHike

ஈரோடு:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் சார்பில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

பெட்ரோல், டீசல் விலை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு மேட்டூர் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகளை கைது செய்தனர். #BharathBandh #PetrolDieselPriceHike 

Tags:    

Similar News