செய்திகள்
பூதலூரில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய போது எடுத்தபடம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்- அனைத்து கட்சியினர் நடத்திய ரெயில் மறியலில் 50 பேர் கைது

Published On 2018-09-10 09:50 GMT   |   Update On 2018-09-10 09:50 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் நடத்திய ரெயில் மறியல் போராட்டத்தில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூதலூர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பூதலூரில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று காலை வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி செந்தில் சிலம்பரசன், இ.கம்யூனிஸ்டு செந்தில்குமார் உள்பட 50 பேர் பூதலூர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் பூதலூர் ரெயில் நிலையம் வந்ததும் அதனை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பூதலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. #tamilnews
Tags:    

Similar News