செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீதான புகார் ஆதாரமற்றது- அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி

Published On 2018-09-09 16:22 IST   |   Update On 2018-09-09 16:22:00 IST
குட்கா ஊழல் புகார் குறித்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீதான புகார் ஆதாரமற்றது என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். #expolicecommissionergeorge #ministercvshanmugam

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு சென்னையில் துணை கமி‌ஷனராக பணியாற்றினார்.

அப்போது குட்கா ஊழல் பிரச்சினையில் சரியாக விசாரணை நடத்தவில்லை. அவர் பணியில் திறமையில்லாதவராக இருந்தார் என்று முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் நான் நேர்மையானவன். என்மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜார்ஜ் குற்றம் சாட்டுகிறார். நான் நேர்மையானவன் என்பதை எங்கே நிரூபிக்க வேண்டுமோ அங்கு நிரூபிப்பேன் என்று அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள பனையபுரத்தில் இன்று அரசு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: குட்கா ஊழல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டி உள்ளாரே?

பதில்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆதராமற்றது.

கேள்வி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யப்படுவார்களா?

பதில்: இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #expolicecommissionergeorge #ministercvshanmugam

Tags:    

Similar News