செய்திகள்

பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார் நளினி

Published On 2018-09-07 07:56 GMT   |   Update On 2018-09-07 07:56 GMT
ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி, மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்ட மனுவை இன்று வாபஸ் பெற்றார். #RajivGandhiCase #Nalini
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி நளினி, வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலிலேயே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஹரித்ரா என்று பெயரிட்டார்.

தற்போது லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைக்க நளினி முடிவு செய்தார். கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி பரோல் கேட்டு நளினி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். மேலும் சிறைத்துறை தலைவரிடமும் முறையிட்டார். ஆனால், பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ஜெயிலில் நளினி உண்ணாவிரதம் இருந்தார்.



இதற்கிடையே, மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நளினி வாபஸ் பெற்றார். இதையடுத்து, அந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து ஆளுநர் முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் பரோல் மனுவை நளினி வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #RajivGandhiCase #Nalini
Tags:    

Similar News