செய்திகள்

எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - கவர்னர் பங்கேற்பு

Published On 2018-09-06 09:32 GMT   |   Update On 2018-09-06 09:32 GMT
வருகிற 10-ந்தேதி வேலப்பன்சாவடியில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பட்டங்கள் வழங்குகிறார்.
சென்னை:

எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். கன்வென்சன் சென்டர், ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் வருகிற 10-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்குகிறார்.

நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் சிறப்புரையாற்றுகிறார். விழாவில் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்ட்டர் இயக்குனர் சோமநாத், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பரத நாட்டிய நடன கலைஞர் ஷோபனா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக தலைவர் அருண்குமார் பங்கேற்கும் இதில் 2,300 மாணவ- மாணவிகள் இளநிலை பட்டம், முதுநிலை பட்டம் மற்றும் முனைவர் பட்டங்களை பெறுகின்றனர்.
Tags:    

Similar News