செய்திகள்

அசோக் நகரில் தண்ணீர் லாரி மோதல் - மெக்கானிக் பலி

Published On 2018-09-03 14:52 IST   |   Update On 2018-09-03 14:52:00 IST
அசோக் நகரில் தண்ணீர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மெக்கானிக் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

சென்னை கொளத்தூர் பகவதி அம்மன் தெருவைச் சேர்ந்தவர் அண்ணா துரையின் மகன் ஆனந்தன் (29) கிண்டி கார் சர்வீஸ் சென்டரில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். ஆனந்தன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அசோக் நகர் நோக்கி வடபழனி நூறடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஆனந்தன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தன் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற தண்ணீர் லாரியை கண்டறிய வடபழனி 100 அடி சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News