செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலையை இவ்வளவு உயர்த்துவது நியாயமா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2018-09-03 07:08 GMT   |   Update On 2018-09-03 07:08 GMT
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், உற்பத்தி வரியை குறைக்கும்படி வலியுறுத்தி உள்ளார். #PetrolPrice #MKStalin
சென்னை:

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வெளிநாடுகளுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, உள்நாட்டில் தாறுமாறாக விலையை உயர்த்தி வருவதாக பொதுமக்கள் தரப்பில் விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில்  பெட்ரோல் விலையை  உயர்த்திவிட்டு வெளிநாடுகளுக்கு பெட்ரோல் லிட்டர் 38 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 34 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்வது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது எனக் கூறியுள்ளார்.


பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்கு எக்சைஸ் வரியை குறைத்திட மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #PetrolPrice #MKStalin
Tags:    

Similar News